வேலை கொடுத்த முதலாளிகளை துண்டு துண்டாக வெட்டி கொன்ற செவிலித்தாய்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

1429

murder

பிரான்ஸ் நாட்டில் செவிலித்தாயின் பராமரிப்பில் இருந்த 2 மாத குழந்தை இறந்ததை தொடர்ந்து, அதை மறைக்க குழந்தையின் பெற்றோர்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த செவிலித்தாயிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஒரு குடியிருப்பில் Ying Wang மற்றும் Liangsi Xui என்ற பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

குழந்தையை பாதுகாப்பாக பராமரிக்க ஒரு செவிலித்தாயை நியமிக்க எண்ணிய பெற்றோர்கள் Hui Zhang(34) என்ற பெண்ணை நியமித்துள்ளனர்.இந்நிலையில், செவிலித்தாயின் பராமரிப்பில் இருந்த அந்த குழந்தை ஒரு நாள் திடீரென இறந்து விடுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் செவிலித்தாயை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் செவிலித்தாயும் அவரது காதலனும்(34) இருந்துள்ளனர்.

குழந்தை எவ்வாறு இறந்தது? இதற்கு நீங்கள் தான் காரணம் என பெற்றோர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.‘தயவு செய்து குழந்தை இறந்ததை பற்றி பொலிசுக்கு தெரிவிக்க வேண்டாம். நாங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்’ என இருவரும் பெற்றோர்களிடம் கெஞ்சியுள்ளனர்.ஆனால், பெற்றோர்களின் ஆத்திரம் குறையவில்லை. இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பத்தில் தாக்குதலுக்கு உள்ளான செவிலித்தாயின் காதலன் மயக்கமாகி கிழே விழுந்து விடுகிறார்.

ஆனால், பெற்றோர்களை தனியாக எதிர்க்கொண்டு அந்த செவிலித்தாய் அவர்கள் இருவரை வீழ்த்தி குளியல் அறைக்கு இழுத்து சென்றுள்ளார்.பின்னர், மின்சாரத்தில் இயங்கும் ரம்பத்தை எடுத்து வந்து இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மின்சார ரம்பத்தில் அதிக ஓசை எழுந்ததால், அதனை மறைக்க வீட்டில் இருந்த ‘வாஷிங் மிஷினை’ ஓட விட்டுருக்கிறார்.

இந்நிலையில், மயக்கத்தில் இருந்த காதலன் எழுந்துவிட நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.வேறு வழியின்றி பெற்றோர்களின் உறுப்புகள் மற்றும் இறந்த குழந்தையின் உடலை மூட்டியாக கட்டி Vincennes காட்டுப்பகுதியில் வீசி விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களுக்கு பிறகு, அந்த காட்டுப்பகுதியில் 2 பேர் நடைப்பயிற்சிக்காக சென்றபோது அவர்களது கண்ணில் வெட்டப்பட்ட ஆண் கால் உறுப்பு தெரியவர உடனடியாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.உடனடியாக மோப்ப நாய்களுடன் வந்த பொலிசார் சுற்றிலும் இருந்த சில உடல் உறுப்புகளை கண்டுபிடித்தனர். ஆனால், முழு உறுப்புக்களும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவர்களை கொலை செய்தது யார் என பொலிசார் விசாரணை நடத்தி வருகையில், செவிலித்தாயும் அவரது காதலனும் தானாக பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.ஆனால், பெற்றோர்கள் தங்கள் இருவரையும் கொல்ல வந்ததால் தான் அவர்களை கொலை செய்தோம் என கூறியுள்ளனர்.இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை பாரீஸ் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.கொலைக்குற்றத்தில் செவிலித்தாயின் காதலனுக்கு எந்த தொடர்பும் இல்லாததால் அவரை நீதிபதிகள் விடுதலை செய்தனர்.

பெற்றோர்களை நான் கொலை செய்தது உண்மை தான். அதற்காக மிகவும் வருந்துகிறேன் என செவிலித்தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.கொலை குற்றத்தை செவிலித்தாய் ஒப்புக்கொண்டதால் அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.