இலவச வீடியோ சட்டிங் மற்றும் குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்கைப் சேவையினை வழங்கும் உலகின் முன்னணி இணைய நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது தனது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.இதன்படி ஸ்கைப் அழைப்புக்களை ஏற்படுத்தும்போது IP முகவரிகளை கண்டுபிடிக்க முடியாதவாறு புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப் புதிய சேவையானது 2012ம் ஆண்டு இடம்பெற்ற சைபர் தாக்குதலை எச்சரிக்கையாகக் கொண்டு ஹேக்கர்களால் தனது பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் இவ்வாறு பாதுகாப்பை வழங்க முன்வந்துள்ளது.எனினும் இவ் வசதி ஊடாக அநாமதேய அழைப்புக்கள் மூலம் தனி நபர்களுக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்படாலம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டதக்கது.