ரயிலில் கழிப்பறை இல்லாததால் பெண்ணிற்கு நேர்ந்த அவமானம்: இழப்பீடு வழங்க நீதிமன்றத்தில் வழக்கு!!

517

gavel

ஜேர்மனி நாட்டில் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் அங்கு கழிப்பறை இல்லாமல் தவித்த சமயத்தில் அவருக்கு நடந்த அவமானத்திற்காக ரயில் நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியில் உள்ள Koblenz என்ற நகரில் இருந்து Trier என்ற நகருக்கு ரயில் ஒன்று பயணம் செய்துள்ளது. இதில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு, கழிப்பறையை பயன்படுத்த எழுந்து சென்றுள்ளார். ஆனால் அங்கு ‘Toilet, Out of Order’(கழிப்பறை தற்போது பயன்பாட்டில் இல்லை) என எழுதப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.ரயிலில் இந்த ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. ஆனால், பெண்ணால் சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியவில்லை. ரயிலில் வேறு இடமும் இல்லை.

பல பயணிகள் இருந்த அந்த ரயிலில் அவரால் இருக்கையில் அமரக்கூட முடியவில்லை. ஆனால், மாற்று வழி இல்லாததால், சுமார் 2 மணி நேரம் கடும் அவதியுடன் பொறுத்துக்கொண்டு பயணம் செய்து Trier நகரை ரயில் அடைந்தவுடன், ரயில் நிலைய கழிவறையை நோக்கி ஓடியுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அவரது ஆடைகளிலேயே சிறுநீர் கழித்து விடுகிறார். இதனால் பொதுமக்கள் முன்னிலையில் அவமானம் ஏற்பட்டதால் 400 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் அந்த அரசாங்க ரயில் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த யூலை மாதம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, பயணிகளின் வசதிக்காக கழிப்பறையை பயன்பாட்டில் வைக்காத குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 200 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

ஆனால், உள்ளூர் ரயில்களில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்திற்காக இழப்பீடு வழங்க முடியாது என ரயில் நிறுவனம் மறுத்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.இந்த மேல் முறையீடு தொடர்பான இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்பது நீதிபதியின் தீர்ப்பிற்கு பின்னரே தெரியவரும்.