
கனடாவில் உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் சிகிச்சையின்போது தவறான வழிமுறைகள் போதித்த காரணத்தினால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.கியூபெக் மாகாணத்தில் உள்ள Durham-Sud என்ற நகரில் ஆண்மீக வழிமுறைகள் மூலம் சிகிச்சைகள் அளிக்கும் மையம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் Gabrielle Frechette என்பவர் பயிற்சியை அளிப்பவராகவும், இவருக்கு Ginette Duclos மற்றும் Gerald Fontaine ஆகிய இருவர் உதவியாளர்களாக இருந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு யூலை மாதம் இந்த மையத்தில் ‘உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும்’ பிரத்தியோக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் கலந்துக்கொண்டவர்கள் உடல் முழுவதும் மண் பூசிக்கொண்டு, அதற்கு மேல் பாலிதீன் காகிதங்களை சுற்றி, தலைகளை நன்றாக மூடிக்கொண்டு காற்று அதிகமாக இல்லாதவாறு வெயிலில் அமர்ந்து இருக்க வேண்டும்.இந்த பயிற்சியானது தொடர்ந்து 9 மணி நேரங்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பயிற்சியால் இரண்டு பெண்களுக்கு அதிக அதிகளவில் வியர்வை போக்கும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், Chantal Lavigne(35) என்ற பெண்ணின் உள்ளுறுப்புகள் செயல்படாமல் அடங்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கும் நாளான நேற்று, முதன்மை குற்றவாளியான பயிற்சியாளருக்கு 3 வருடங்களும், அவரது உதவியாளர்கள் இருவருக்கும் தலா 2 வருடங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.





