விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

493

Deadஆந்திர மாநிலத்தில் நான்காவது மாடியில் இருந்து குதித்து 20 வயது பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குண்டூர் மாவட்டம், செப்ரோலு மண்டலம், வட்லமுடி கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துவந்த மாணவி ஹரினி(20) அதே கல்லூரி வளாகத்தை ஓட்டியுள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இன்று காலை விடுதியின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த அவர் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்ட சகமாணவிகள் ஹரினியை அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்துக்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ஹரினியின் பிரேதத்தை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து அவரது மரணத்துக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.