அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அழைப்பு!!

815

SriLanka-Flag

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரச, தனியார் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச கட்டடங்கள் மற்றும் நிறுவனங்களில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு சகல அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அமைச்சு இதுதொடர்பில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று மாலை காலி முகத்திடலில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் இசைக்குழுவினர் ‘சுதந்திரத்தின் இதய துடிப்பு’ என்னும் தொனிப்பொருளுடன் இசைக்கச்சேரி நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.