
பெல்மதுளை மரக்கலஎல்ல நீர்வீழ்ச்சி யில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பெல்மதுளை லெல்லோபிடிய பிரதேசத்தை சேர்ந்தவர்களான ஆர்.ஏ.புபுது அசங்க விஜேசேகர (வயது 20) மற்றும் அநுஷ்க லக்மால் ஹஷான் (ருக்மல்) (வயது 19) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
பலியான இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு நேற்றுமுன்தினம் காவத்தை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆர்.டி.பி.எச்.ரத்னவீர மற்றும் பெல்மதுளை மரண பரிசோதகர் ரத்னசீலி ஆகியோர் தலைமையில் மரண விசாரணை இடம்பெற்றது. மேற்படி இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறியே பலியானதாக விசாரணையின் போது தெரியவந்தது.





