செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு கிணற்றில் விழுந்த அவுஸ்திரேலிய பெண்மணி!! (வீடியோ இணைப்பு)

506

abc-just-ordered-a-new-show-called-selfie

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலிய பெண்மணி செல்ஃபி எடுக்க முயன்ற போது கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 50 வயது பெண்மணி ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.கடந்த 25ம் திகதி, குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்திற்கு சென்ற அவர் அங்குள்ள கிணற்றின் அருகே நின்று செல்ஃபி எடுத்துள்ளார்.இதில் எதிர்பாராதவிதமாக அந்த பெண் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக தங்களது சட்டைகளை கழற்றி, அதனை ஒன்றாக கட்டி, கிணற்றில் இறக்கியுள்ளனர்.அந்த சட்டை துணியை பிடித்துக்கொண்டு அந்த பெண் மேலே ஏறியுள்ளார்.கிணற்றில் விழுந்த பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.