கணவனை சுட்டு கொன்ற மனைவிக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி: காரணம் என்ன?

508

abuse_forgot_003

பிரான்ஸ் நாட்டில் கணவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மனைவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டில் Jacqueline Sauvage(68) என்ற பெண் Norbert Marot என்பவரை திருமணம் செய்து 47 வருடங்களாக வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஆனால், இவர்களது வாழ்க்கையே நரகத்தில் இருப்பது போன்று அன்றாட சித்ரவதைகளை அனுபவித்து வந்துள்ளனர்.மதுபோதைக்கு அடிமையான கணவர், மனைவியை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

ஓரு நாள், இரண்டு நாட்கள் அல்ல. திருமணம் ஆன நாள் முதல் 20 வருடங்களுக்கு மேலாக கணவரிடம் மனைவி பாலியல் ரீதியான சித்ரவதை அனுபவித்து வந்துள்ளார்.இதுமட்டுமில்லாமல், மகள்களையும் மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளார்.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 10ம் திகதி தந்தையின் சித்ரவதையை தாங்கிக்கொள்ள முடியாத மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்கிறான்.

இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, துப்பாக்கியை எடுத்து கணவரை 3 முறை சுட்டுக்கொன்றுள்ளார்.2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட அவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.‘தற்காப்பிற்காக தான் கணவரை கொன்றதாக’ பெண் கூறிய வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஏனெனில், பிரான்ஸ் நாட்டு சட்டப்படி, தனது உயிருக்கு நேரடியாக ஆபத்து வரும்போது, அதன் விளைவாக ஏற்படும் அதீத கோபம் அல்லது அச்சத்தில் கொலை செய்தால் மட்டுமே தற்காப்பாக எடுத்துக்கொள்ப்படும்.ஆனால், பெண்ணின் வழக்கில் மகன் தூக்கிட்டதற்கு பழிவாங்க கொலை செய்வது தற்காப்பில் சேராது.

எனினும், பெண்ணிற்கு இழைக்கப்பட்ட முரணான தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என பிரான்ஸ் நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.மேலும், பெண்ணிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டேவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிகிழமை அன்று சிறையில் உள்ள பெண்ணின் மகள்களை அவர்களது வீட்டில் ஜனாதிபதி சந்தித்தாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பை தொடர்ந்து, ’10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் தண்டனையை ரத்து செய்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நேற்று ஜனாதிபதி அலுவலகம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.