
சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் இக்கட்டான நிலைமை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்காக அந்த நாட்டில் இந்திய அணி தற்போது தங்கியிருக்கும் நிலையில் கோஹ்லி தனது முகாமையாளருடன் அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றிட்கு காலை உணவை உட்கொள்ளச் சென்றிருந்தார்.
அவ் வேளையில் அங்கு வருகை தந்திருந்த இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் கோலியுடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புவதாக கூறிய வேளை, அந்தப் பெண்ணிடம் ”தற்போது முடியாது” என்று கூறியுள்ளனர்.
உடனே அந்தப் பெண் இவர்களிடம் என்ன முடியாது? என்று கேட்டுள்ளார். அதற்கு கோலியின் முகாமையாளர் கோலியைக் காட்டி இவருடன் புகைப்படம் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்ட இலங்கைப் பெண்ணோ ”நான் ஏன் இவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும்? யார் இவர்? நீங்கள் என்ன அவ்வளவு பிரபலமானவரா? எனக்கு உங்களைத் தெரியாது,” எனக் கூறியுள்ளார்.
மேலும் ஹோட்டல் முகாமையாளரிடம் சென்ற அப் பெண் “அந்த இந்தியன் பையன் என்னை தொந்தரவு செய்கின்றான்” (That Indian guy harassed me”) எனவும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட கிர்க்கெட் வீரர் கோலியும், அவரது முகாமையாளரும் மிகுந்த அவமானத்துடன் தலை குனிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தை குறித்த பெண்ணின் கணவர் பேஸ்புக் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






