பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட வௌிநாட்டு பிரஜை கைது!!

513

1 (13)

சட்டவிரோதமாக ஒருதொகை வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 47 வயதான சிங்கப்பூர் பிரஜை என சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி கூறியுள்ளார்.

இவரது பயணப் பையில் இருந்து, 42,000 யூரோ, 37,000 அமெரிக்க டொலர், 27,000 ஸ்ரேலிங் பவுன் மற்றும் 45 இலட்சம் இலங்கை ரூபா போன்றன மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றின் மொத்தப் பெறுமதி, இரண்டு கோடியே இருபத்து இரண்டு இலட்சத்து எழுபத்து ஏழாயிரத்து இருநூற்று இருபது ரூபாய் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.