காணாமல் போன ஐந்து மீனவர்களும் சடலமாக மீட்பு!!

992

Dead

அண்மையில், மீன்பிடிப் படகொன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஐந்து மீனவர்களின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் படகு விபத்துக்குள்ளான கடற்பகுதியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

மேலும், சடலங்களைக் கொண்டுவரும் படகு தற்போது காலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 31ம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.