மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து 145 பேர் திருப்பி அனுப்பிவைப்பு!!

472

Sri-Lanka-Air-Port

இலங்கையிலிருந்து மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்னாக சென்ற 145 பேர் மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மத்தியக்கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமானச் சேவைக்குசொந்தமான ul-266 என்ற விமானத்தில் சவுதியில் இருந்து 15 பெண்களும் காலை 6.35க்கு வந்தடைந்த இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான ul-230 என்ற விமானத்தில் குவைடிலிருந்து 100 பெண்களும் டுபாய் மற்றும் கட்டாரிலிருந்து 30 பெண்களும் வந்தடைந்துள்ளனர்.நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.