360 டிகிரி கோணத்தில் சுழன்று தீப்பொறியை கிளப்பிய கார்! உயிர் தப்பிய குடும்பம்!!

591

car_fire_003

இங்கிலாந்தின் நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்த கார் ஒன்று 360 டிகிரி கோணத்தில் சுற்றிய வண்ணம் தீப்பொறியை கிளப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.இங்கிலாந்தின் M5 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று சென்றுகொண்டிருந்த போது, லொறியின் பக்கவாட்டில் இருந்து பாய்ந்து வந்த வெள்ளை நிற கார் ஒன்று, சாலையில் 360 டிகிரி கோணத்தில் சுழன்றுகொண்டே தீப்பொறிகளை கிளப்பிய வண்ணம் சென்றது, ஒரு கட்டத்தில் சாலையின் ஓரத்தில் நின்றுவிட்டது.

இதனைப்பார்த்த லொறி ஓட்டுநர் விரைந்து சென்று பார்க்கையில், 4 மாதக்குழந்தை பத்திரமாக காரின் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்துள்ளது, மேலும் அக்குழந்தையின் தந்தை, தாய் ஆகிய இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு லொறி ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த கார் ஓட்டுநர், காரின் வேகத்திறனை சரிபார்ப்பதற்காக கம்பெனியிடம் இருந்து அனுமதி பெற்று வாங்கி சென்றுள்ளார், அப்போது தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிறுவனம், காரினை சோதனை செய்ய வாடிக்கையாளர்கள் எடுத்துச்செல்லும்போது அதனுள் கமெரா பொருத்தப்படும், தற்போது வெளியாகியுள்ள இந்த காட்சிகள் மூலம் இந்த விபத்திற்கும் லொறி ஓட்டுநருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.மேலும், காப்பீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்கும் எனக்கூறியுள்ளனர்.