வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் இன்று(03.02.2016) இரவு 7.15 அளவில் மோட்டார் வாகனவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த கனரக வாகனத்தினை முந்திய மோட்டார் வாகனம் வவுனியாவிருந்து வந்த மோட்டார் வாகனத்தின் மீது எதிரே மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் வண்டியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகினார்
சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






