
இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறை கைதிகள் சிலர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறு குற்றங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள், அபராதம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
600க்கும் அதிகமான சிறைக் கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார். அதில் 593 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.மேலும் சிறைக் கதைிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கு இன்றைய தினம் அதிக நேரம் வழங்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.





