
சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் அமைந்துள்ள 5 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் இருந்து அதிகாலையில் திடீரென்று எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.தொடர்ந்து அந்த குடியிருப்பில் இருந்து நெருப்பு கொழுந்து விட்டு எரிந்துள்ளது, தீ விபத்து குறித்து உடனடியாக அப்பகுதி மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த அழைப்பினை அடுத்து வந்த தீயணைப்பு துறையினர் காலை 8:30 மணி வரை கடுமையாக போராடியுள்ளனர்.தீ விபத்தினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள அந்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்து சோதனையில் ஏற்பட தற்போது முடியாத நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது, மேலும் ஒருவர் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
கட்டிடத்தின் உள்ளே சென்று சோதனை நடத்தினால் மட்டுமே பாதிப்புகள் குறித்தும், உயிர் சேதம் குறித்தும் உரிய தகவல்களை வெளியிட முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.20 குடியிருப்புகள் கொண்ட இந்த கட்டிடத்தில் பல குடியிருப்புகளும் காலியாகவே இருப்பதாய் கூறப்படுகிறது.
தீ விபத்தினால் ஏற்பட்ட கடும்புகை காரணமாக ஒருவருக்கு மூட்டுத்திணறல் ஏற்பட்டதாகவும் ஒருவர் மொட்டைமாடியில் இருந்து குதித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த இருவரும் அபாய கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தபோதும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





