மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி!! அதிர்ச்சியில் சின்னத்திரையினர்

982

madhurai_muththu001

பல மேடைகளில் தன் நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைத்தவர் மதுரை முத்து. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கூட தலையை காட்டினார்.இந்நிலையில் இன்று சிவகங்கை பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இவருடைய மனைவி வையம்மாள் சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார், ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே முத்துவின் மனைவி வையம்மாள் இறந்துள்ளார். இச்சம்பவம் சின்னத்திரை கலைஞர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த முத்துவின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் தாங்க முடியாதவை தான்.