
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொஹமட் ஹபீஸுக்கு ஒருவருட காலம் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. விதிமுறைகளை மீறி ஹபீஸ் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்தே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள சுப்பர் லீக் போட்டியில் ஹபீஸின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பது தொடர்பாக ஐ.சி.சி. முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





