ஸீகா வைரஸ் இரத்த மாதிரி பரிசோதனை ஆரம்பம்!!

563

glucose_test

ஸீகா வைரஸ் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதை இன்று (05) முதல் பொரல்லை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கவுள்ளது. அதற்காக தேவைப்படும் இரசாயனப் பொருட்கள் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால கூறினார்.

ஸீகா வைரஸ் தொற்று பரவியுள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றாலாப் பயணிகள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நேற்றைய தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.