
சோமாலியா நாட்டிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் ஓட்டை வழியாக பயணி ஒருவர் விழுந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றுகொண்டிருந்தது.
விமானத்தில் 74 பயணிகள் மட்டுமே இருந்தால் அவர்கள் விரும்பிய இடத்தில் அமர்ந்துள்ளனர்.இந்நிலையில் விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது.
பின்னர் விமானத்தில் தீ பற்றியதால் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூக்குரலிட்டுள்ளனர்.உடனடியாக விமானி மொகடிஷூக்கு விமானத்தை திருப்பி அவசரமாக தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.விமானியில் இந்த செயலால் பெரும் விபத்தும் உயிர் பலியும் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல் காரணமாகவே விமானத்தில் ஓட்டை ஏற்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார்.இதனையடுத்து இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் ஓட்டை ஏற்பட்டது தொடர்பாக பயணி ஒருவர் எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.





