இனி 100ல் இருந்து 256.. Whatsapp பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி்!!

571

whatsapp-new-features-voice-calls1

Whatsapp குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 100ல் இருந்து 256ஆக உயர்த்தப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் Whatsapp பயன்படுத்துகின்றனர்.தங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதற்காக பலரும் Whatsupp பயன்படுத்துகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஆண்டு சந்தா இல்லாமல் Whatsapp இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த இன்ப அதிர்ச்சியாக Whatsapp குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது 1 பில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்ட மற்றுமொரு சமூக வலைத்தள சேவையாக மாறியுள்ளது.

இதற்கு முன்னர் பேஸ்புக் சமூக வலைத்தளம் இச்சாதனையை குறுகிய காலத்தில் எட்டியிருந்தது.இதேவேளை மாதாந்தம் 450 மில்லியன் வரையானவர்கள் வட்ஸ் அப்பினை பயன்படுத்திவருதுடன், 42 பில்லியன் குறுஞ்செய்திகள் மற்றும் 250 மில்லியன் வரையான வீடியோக்கள் நாளாந்தம் பகிரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த புதிய வசதி தற்போது சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது.அன்ட்ரொய்ட் செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.