தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை!!

620

thinusa_00212 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று இந்தியாவின் குவாஹாட்டியில் இந்திரா காந்தி மைதானத்தில் ஆரம்பமானது. தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் இம்முறை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அதேவேளை இந்தியாவில் இருந்து அதிக போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் இலங்கை சார்பாக தினூஷா ஹன்சனி என்ற வீராங்கனை மகளிருக்கான 48 கிலோகிராம் எடையுடைய பளுதூக்கும் போட்டியில் முதலாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை தெற்காசிய விளையாட்டு போட்டியின் முதல் நாளான நேற்று குவாஹாட்டியில் மகளிர் பிரிவில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 25-9, 25-9 25-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இலங்கை 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

ஆடவர் பிரிவில் வங்கதேசம் 25-12, 20-25, 21-25, 31-29, 15-13 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானையும், இலங்கை அணி 25-10, 25-15, 25-10 என்ற கணக்கில் நேபாளத்தையும், பாகிஸ்தான் 25-22, 25-14, 25-20 என்ற கணக்கில் மாலத்தீவையும் தோற்கடித்தன.685749512Sarc