
நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டன வேதாளம் திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.இப்படத்தை கன்னட புகழ்பெற்ற இயக்குனர் சுதிரின் மகன் நந்தா கிஷோர் இயக்கவுள்ளார்,
மேலும் கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அஜித் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளராம்.இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்கும் என்கிறது கன்னட வட்டாரம். இதற்கு முன்பு கிஷோர் தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.





