தைவானில் பயங்கர நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி தவிப்பு!!

563

earth_taiwan_002

தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின.தைவான் நாட்டில் ரிக்டர் 6.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கின.

ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்டுள்ள உயிர் பலி குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

எனினும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அவசர பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.முன்னதாக, கடந்த 1999ஆம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,300 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.