
நுவரெலியா – இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று நேற்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளது. அப் பகுதிக்கு சென்ற சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிசுவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
சிசுவை பிரசவித்தவுடேனே இவ்வாறு ஆற்றில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்தோடு சந்தேகநபரான தாயை கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





