தடியால் தாக்கப்பட்டு 81 வயதான முதியவர் பலி!!

1060

dead-107482-350x200

இரத்தினபுரி, மாவத்தை பிரதேசத்தில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான நபர் கடுங்காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவத்தை, பலாபத்தல என்ற பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த இரத்தினபுரி பொலிஸார் இவரை இன்றைய தினம் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.