
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படம் இப்போது மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. ப.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் மெட்ராஸ் கலையரசன், அட்டகத்தி தினேஷ், நாசர் என நடிகர் பட்டாளம் நீண்டு கொண்டே போகிறது.சென்ற மாதம் மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து வந்த குழு, சில நாட்கள் சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பை நடத்தினர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்ற வாரம் தான் மலேசியா சென்றனர்.இப்போது, நடிகை தன்ஷிகாவின் அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதால், அவர் பிரிய மனமின்றி மிகவும் சோகத்தோடு அனைவரிடமும் விடை பெற்று சென்றுள்ளார்





