அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 116 பேர் கடலில் கைது (படங்கள்)!!

545

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென் பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போது கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் அதனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 59 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 31 சிறுவர்கள் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

1 3 2