
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட நீதிபதி வீட்டில் மேய்ந்த ஆடு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் தலைநகர் கோரியா மாவட்ட நீதிபதியின் உதவியாளர் ஹேமந்த் ராத்ரே பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சம்பந்தப்பட்ட ஆடு தொடர்ந்து நான் பராமரிக்கும் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து செடி, கொடிகளை மேய்ந்தது.இரும்பு வாயில் கதவை எகிறி குதித்து ஆடு தோட்டத்தில் இருந்த செடிகளை நாசப்படுத்தியது.
இது தொடர்பாக பல முறை ஆட்டின் உரிமையாளர் அப்துல் ஹசனிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை.எனவே ஆட்டின் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், ஆட்டின் உரிமையாளர் அப்துல் ஹசனையும் அந்த ஆட்டையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.மேலும், ஆட்டின் மீதும், அப்துல் ஹசன் மீதும் இரண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கும் பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





