
நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தம்மை பாராளுமன்றத்தில் சுதந்திரமான அணியாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி, நேற்று பாராளுமன்றத்தினுள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்தப் பிரச்சினையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு, சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களது ஆர்ப்பாட்டத்தை பொருட்படுத்தாது சபை நடவடிக்கைகளை முறையே கொண்டு செல்லவும் அவர் தீர்மானித்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு, தொலைபேசி ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு இடமளிக்க வேண்டும் என, யாரே மிரட்டல் விடுத்ததாக, கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். எனினும் தான் அதனை பொருட்படுத்தப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





