
ஹிக்கடுவை கடற் பகுதியில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதோடு, பின்னர் அவர் மீட்கப்பட்டு கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் மரணமடைந்தவர் 72 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சடலம் கராபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





