
புதிய சட்டமா அதிபராக முன்னாள் சிரேஷ்ட சொலிசிஸ்டர் ஜெனரல் ஜயன்த ஜயசூரிய சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். புதிய சட்ட மா அதிபரை நியமிப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று மாலை கூடியிருந்தது.
இந்த கூட்டத்தின் போது, ஜயன்த ஜயசூரியவை அப் பதவிக்கு தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 1983ம் ஆண்டில் இணைந்து கொண்ட ஜயன்த ஜயசூரிய 29வது சட்ட மா அதிபராக, இன்று ஜனாதிபதி முன்னிலையில், பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.





