மீனவர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!!

494

indian-fishermen

கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக விஷேட தொலைபேசி இலக்கம் இரண்டை கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய 011-2346134 மற்றும் 0722244063 என்ற இரண்டு இலக்கங்களே இவ்வாறு அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களாகும்.

இதேவேளை கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் இந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்க முடியும் என்பதோடு இதன்பொருட்டு நவீன உயிர்காப்பு உபகரணங்களோடு வைத்தியர் உள்ளிட்ட 6 ஊழியர்களைக் கொண்ட குழுவுடனான உயிர்காப்பு படகொன்று சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த ஏற்பாடுகளை இலங்கை உயிர்காப்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.