
இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மண் ஏற்றிச் சென்ற ஒருவரிடம் தொல்லை இன்றி அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் 8500 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளனர். அதில் 5000 ரூபாவை முன்னதாக பெற்றுக் கொண்டுள்ளதோடு, மீதமுள்ள 3500 ரூபாவை இன்று பெற முற்பட்ட வேளையே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரியந்த சந்திரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடை வழங்க, ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியதாக கூறப்படும், மோட்டார் வாகன திணைக்களத்தின் குருநாகல் மாவட்ட அலுவலக அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரை குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





