உலகம் தோன்ற காரணமான ஈர்ப்பு ஆற்றல் அலைகள் கண்டுபிடிப்பு!!

492

Wave

உலகம் தோன்ற காரணமான ஈர்ப்பு அலைகள் அலைகளை சர்வதேச விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

விண்வெளியில் கருத்துளைகள்’ எனப்படும் நியூட்ரோன் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது அவை இணைந்து ஈர்ப்பாற்றல் அலைகள் உருவாகுகின்றன. அவை சுருங்கி விரிவடைவதால் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக கருதப்படுகிறது.

இந்த ஈர்ப்பு ஆற்றல் அலைகள் பிரபஞ்சத்தின் ஒலி வழித்தடங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஈர்ப்பு ஆற்றல் அலைகளின் விரிவாக்கம் தான் வெளியையும், காலத்தையும் உருவாக்குகின்றன.

‘வெளியும், காலமும் ஒன்றுதான்’ என்ற சார்பு நிலை கோட்பாடை (ரிலேடி விட்டி தியரி) சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறினார். இருந்தாலும் இக்கோட்பாடு குறித்து அவரே சந்தேகங்களை எழுப்பினார்.

அதை தொடர்ந்து விஞ்ஞானிகள் அதுபற்றி தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் லிசோ எனப்படும் அதிநவீன டெலஸ் கோப் கருவி மூலம் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டனர். இதற்காக 110 கோடி அமெரிக்க டொலர் செலவிடப்பட்டது.

விஞ்ஞானிகள் மேற் கொண்ட இந்த ஆய்வின் மூலம் கருத்துளைகளின் மோதலில் எழுந்த ஓசையின் நுண்ணிய ஈர்ப்பாற்றல் அலைகளை கண்டறிந்துள்ளனர்.

இத்தகவலை விஞ்ஞானிகள் குழுவினர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இக்கண்டுபிடிப்பு மூலம் ஐன்ஸ்டீன் கொள்கை ரீதியில் கூறிய கருத்து தற்போது நிரூபணமாகியுள்ளது.