உரத்தின் விலை உயர்வால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!!

512

Veg

மரக்கறி உற்பத்தியாளர்களுக்கான உரமானியம் வழங்கப்படாமையால் இனிவரும் காலங்களில் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நுவரெலியா, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இவர்களுக்கான உரமானியம் அரசாங்கத்தினால் வழங்கப்படாததால் இவர்கள் பெருந்தொகை பணத்தினை செலவிட்டு உரங்களை கொள்வனவு செய்வதாகவும் அகில இலங்கை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் உரமானியத்தை வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போதும் இதற்கு அரசாங்கம் எந்த தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளும், கொள்வனவாளர்களும் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.