இந்து ஆலயத்தை உடைத்து பெருமளவான நகை, பணம் கொள்ளை!!

876

751715019Kovil

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த உண்டியல் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தாலி, ஏனைய பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கடந்த மாதம் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ச்சியாக மண்டலாபிஷேகம் இடம்பெற்று வந்தமை குறிப்பிடதக்கது. நேற்றைய தினமும் பூஜைகள் இடம்பெற்று பொதுமக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுப்பட்டு வீடு திரும்பிய பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.