அவர்கள் செய்த பாவத்தை நாங்கள் கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி!!

506

ma

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

நாட்டுக்கு ஆபத்தான ஜெனீவா யோசனைக்கு ஜனாதிபதியும் பிரதரமரும் ஒப்புக் கொண்டதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் விதமாகவே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

“சிலர் பத்திரிகைகளுக்கு பலவாறு கூறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு கூறுவது, அவர்கள் செய்த பாவங்களைத்தான் நாங்கள் இப்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” என்று ஜனாதிபதி கூறினார்.

இது தவிர எதிர்வரும் திங்கட்கிழமை தான் ஜேர்மனிக்கு செல்வதாகவும் அதன்போது பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளதாகவும் கூறிய ஜனாதிபதி ஒருபோதும் நாட்டுக்கு ஆபத்தான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடுவதில்லை என்றும் கூறினார்.