
ஹங்வெல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்றில் ஏறுவதற்கு முற்பட்ட போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பயணி ஒருவரை ஏற்றுவதற்கு முற்பட்ட வேளை பயணி தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. திக்ஓயா, படல்கலவத்தை பிரதேசத்தை சேரந்த 48 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.





