
யக்கலமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து பஸ்ஸொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





