இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த முதியவர் கைது!!

390

1 (8)

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் ஆறு வயதுடை இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த இரு சிறுமிகளையும் சொக்லெட் வாங்கித் தருவதாக ஏமாற்றி தனது வீட்டுக்குள் குறித்த முதியவர் அழைத்துச்; சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக சிறுமிகளை மீட்டு நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக சந்தேக நபரான முதியவரை கைது செய்துள்ளனர்.