இரவு நேரங்களிலும் தபாலகங்களை திறக்க நடவடிக்கை!!

522

s300_post_office_logo_960x640

வீதி சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக நாடு பூராகவும் பிரதான நகரங்களில் உள்ள தபால் காரியாலங்களை இரவு 8 மணி வரைக்கும் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தபாலகங்களை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது சிறந்த விடயம் தான் ஆனால் சிறந்த மேற்பார்வை இல்லாமல் இந்தத்திட்டத்தை தபால் திணைக்களம் முன்னெடுத்தால் மேலும் பல தரக்குறைவான நியமனங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாதென்று ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தைசெயல்படுத்தினால் இரவு நேர சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி மின்சார கட்டணத்திற்கான கூடுதல் பணம் செலவழிக்க நேரிடும் அதேப்போல் இதற்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே இந்தத் திட்டத்தை , உரிய முறையில் கண்காணிப்பதற்காக சிறந்த மேற்பார்வையுடன் கொண்டு நடாத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.