மோடிக்கு டாக்டர் பட்டம் – இந்துப் பல்கலைக்கழகம் முடிவு!!

453

40136815 (1)

பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர் பட்டம் வழங்க உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 23-ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இசைவு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பட்டமளிப்பு விழா மேடையில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த விழாவின்போது, பிரதமர் மோடிக்கு டாக்டர் பட்டம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக அவரது ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சித்துறையில் புதுமை திட்டங்களை அறிமுகப்படுத்தி, சீர்திருத்தத்தை ஏற்படுத்தியமைக்காகவும், பொதுச்சேவை மற்றும் ஆட்சித்துறையில் பிரதமர் மோடி ஆற்றிய அளப்பரிய பணிகளுக்காக அவருக்கு கவுரவ சட்ட டாக்டர் பட்டம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.