இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்!!

557

SL Medal

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற அதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது.

இந்தியா இதுவரை 146 தங்கப் பதக்கங்களையும் 80 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது.

பாகிஸ்தான பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.