3ம் இடத்தை நழுவவிட்ட இலங்கை அணி!!

423

Ban

19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் 3 ஆம் தரவரிசை தேர்வுக்கான போட்டியில் இன்று இலங்கை அணி தோல்வியடைந்தது. இதற்கமைவாக தரவரிசையில் 3 ஆம் இடத்திற்கு பங்­க­ளாதேஷ் அணி முன்னேறியது.

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்களையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பாக அசலன்க 76 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பங்­க­ளாதேஷ் அணி 3 விக்கட்கள் மாத்திரம் இழந்து 3 பந்துக்கள் எஞ்சிய நிலையில் 218 ஒட்டங்ளை பெற்று போட்டியில் வெற்றியடைந்து 3 ஆம் தரத்திற்கு முன்னெறியது.போட்டியின் ஆட்ட நாயகனாக ஹசன் மராஸ் தெரிவு செய்யப்பட்டார்.