வேறு பெண்ணுடனான காதலால் முரண்பாடு – மனைவியை தாக்கி சூடுவைத்தவர் கைது!!

477

1 (65)

திருகோணமலை – மூதூரில் மனைவியை நெருப்பால் சுட்டும், இரும்புக் கம்பியால் தாக்கியும் காயப்படுத்திய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இம் மாதம் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது குறித்த சந்தேகநபர், வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவ்விடயம் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பில் அவர் கணவனிடம் வினவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் தன்னை இரும்புக் கம்பியால் தாக்கியதோடு, நெருப்பாலும் சூடு வைத்ததாக குறித்த பெண் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு அவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.