உணவு விஷமானமையால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

526

Flag_of_the_Red_Cross.svg

உணவு விஷமானமையால் சுகயீனமுற்ற பாடசாலை மாணவர்கள் 20 பேர் மினுவான்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அந்தப் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னரே இவர்கள் சுகயீனமுற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மினுவான்கொட – பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த 8 – 9 வயதான மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.