
இந்திய கப்பல் படையில் புராதனமான இடத்தை பிடித்த ‘ஐ.என்.எஸ். வீராட்’ போர்க்கப்பல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டது. ராணுவத்தில் 60 ஆண்டு காலம் இக்கப்பல் பணியாற்றி உள்ளது. 30 ஆண்டு காலம் இங்கிலாந்து படையில் இருந்த இந்த கப்பல் 1987ம் ஆண்டு இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.
சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கப்பல் படை விழா அணி வகுப்பில் பங்கேற்ற கப்பல் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பலை அருங்காட்சியத்துடன் கூடிய 5 நட்சத்திர ஹோட்டலாக மாற்ற ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முயும் என்று அரசு கூறுகிறது.
இந்த கப்பலில் 1500 அறைகள் உள்ளது. இதனை கரைக்கு கொண்டு வரவே ரூ.400 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. அதோடு இதன் அறைகளை நட்சத்திர ஹோட்டலாக மாற்றி அமைக்க மேலும் ரூ.300 கோடி செலவு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
மொத்தம் ரூ.700 கோடி செலவானாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆந்திர அரசு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஐ.என்.எஸ். விஷ்ராந்த் என்ற கப்பலை சொகுசு ஹோட்டலாக மாற்ற மராட்டிய அரசுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அம்மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.





