சிங்கப்பூரில் காதலியை கொலை செய்த இந்தியருக்கு சிறைத் தண்டனை!!

494

barscuffs

சிங்கப்பூரில் காதலியை கொலை செய்த இந்திய தொழிலாளிக்கு சிறை மற்றும் சவுக்கடி தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவை சேர்ந்த முருகதாஸ் (41), என்பவர் கட்டுமான தொழிலாளியாக இருந்து வந்துள்ளார்.

அவர் அங்கு பணியில் இருந்த 38 வயது பிலிப்பைன்ஸ் பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார்.ஆனால் அந்த பெண் இவரை காதலிக்க மறுத்து விட்டதோடு இவருடன் ஆன தொடர்பையும் துண்டித்துக்கொண்டார்.இதனால் மனம் வெறுத்து போன அவர், காதலியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அவர் காதலியை முகம், கழுத்து மற்றும் கைகளில் கத்தியால் வெட்டியுள்ளார்.இதனால் படுகாயம்டைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ் ட் மாதம் நடந்த நிலையில், இது தொடர்பாக முருகதாஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.இந்நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்றம் அந்த நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 சவுக்கடியும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.